போர்ச்சுக்கல்லில் ஆயிரத்து 40 யூரோக்களை குறைந்தபட்ச மாத ஊதியமாக வழங்கக்கோரி ஏராளமானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர்ச்சுக்கல் அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து தலைநகர் லிஸ்பனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் சீர்த்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக அவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
2026-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியம் இந்திய மதிப்பில் 94 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
















