இந்தியாவின் புஷ்-அப் நாயகன் என்றழைக்கப்படும் ரோஹ்தாஷ் சவுத்ரி முதுகில் 27 கிலோ எடையைச் சுமந்து 847 புஷ் அப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் பிட் இந்தியா முன்னெடுப்பின் ஒருபகுதியாக நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்வில் ரோஹ்தாஷ் சவுத்ரி தனது முதுகில் சுமார் 27 கிலோ எடையை சுமந்து ஒரு மணி நேரத்தில் 847 புஷ் அப்களை எடுத்தார்.
ரோஹ்தாஷ் சவுத்ரி இந்த முயற்சியை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்த நிலையில் அதற்கான சான்றிதழை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கிக் கவுரவித்தது.
இந்தச் சாதனையை ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிப்பதாக ரோஹ்தாஸ் சவுத்ரி தெரிவித்தார்.
















