அவனியாபுரத்தில் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் செயல்படும் காய்கறி வாரச் சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது செயல்படும். கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் சந்தை என்ற பெயரில் அங்குக் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் வியாபாரத்திற்கு அனுமதி அளித்துக் கடை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் சுமார் 500க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை, மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வாரச் சந்தை என்ற பெயரில் செயல்படும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















