வார இறுதியையொட்டி கொடைக்கானலின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகைபுரிந்த மக்கள், கூட்ட நெரிசல் இல்லாததால் எவ்வித இடையூறுமின்றி சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனர்.
















