ஈரானில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் 50 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வறட்சி நிலவும் நிலையில், சில அணைகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான கொள்ளளவே தண்ணீர் உள்ளன.
டெஹ்ரானின் கிழக்கில் உள்ள 5 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லத்யன் அணையில் 9 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இதனால் நிலைமை மோசமாக உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது. டெஹ்ரானின் அணைகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதால் ஈரான் அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.
இந்நிலையில் இரவு நேரங்களில் டெஹ்ரான் அணைகளில் இருந்து நீர் விநியோகிப்பதை நிறுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
















