நெல்லை வள்ளியூரில், மத ரீதியாகப் பிரச்னை ஏற்படுத்த முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது.
நெல்லை பேருந்து நிலையத்திற்கு அதிகாலையில் வந்தபோது குடும்பத்துடன் ஏறிய பூசாரியிடம், பேருந்து வள்ளியூருக்கு போகாது என ஓட்டுநர் கூறியுள்ளார்.
மேலும், பேருந்து நாலுமாவடியில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்திற்கு சென்று வருவதாகவும், வள்ளியூர் போகாது எனவும் நடத்துநர் அடாவடியாகப் பேசியுள்ளார்.
அத்துடன், பேருந்தில் இருந்த பயணிகள் பூசாரியின் குடும்பத்தைத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வள்ளியூர் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கிய பூசாரி குடும்பத்தினர், பேருந்து முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பூசாரி குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒருமணி நேரமாகச் சிறைபிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மத ரீதியாகப் பிரச்னை ஏற்படுத்த முயன்ற நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















