புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாகக் கண்மாயில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருமயம் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தேவவயல் கண்மாயை புனரமைக்கும் பணியைத் திமுக நிர்வாகியின் மகன் பொன் சங்கர் என்பவர் 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்தம் எடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாகக் கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கண்மாயில் இருந்து சட்டவிரோதமாக அதிகளவில் கிராவல் மண் வெட்டிக் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமைச்சர் ரகுபதியின் சொந்த தொகுதியில் திமுக நிர்வாகிள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், கிராவல் மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















