தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அருகே பயணிகள் நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற் குடையை, ஊரக வளர்ச்சி துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நிழற் குடை இடிக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.
















