ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தருமபுரம் ஆதீனம் தனி அரசாங்கம் போன்று செயல்படுகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்தில், ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தம் பரமாச்சாரியார் சுவாமிகளின் 60வது மணி விழா நடைபெற்று வருகிறது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்று ஆதீனத்திடம் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரம் ஆதீனம், கல்வி மற்றும் மருத்துவ சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும், ஏழை, எளிய மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
















