ராமேஸ்வரத்தில் உள்ள கைலாய ஈஸ்வரர், சமுத்திர வேல் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
இரண்டாம் நாள் யாகசாலை பூஜையையொட்டி நடைபெற்ற கும்மியாட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக வள்ளி கும்மியாட்டம் நிகழ்த்தினர்.
கண்கவர் கலை நிகழ்ச்சியைப் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
















