அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் மணலில் தவித்த சுறாவை மீண்டும் கடலில் விட்ட பெண்ணைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் பெண் ஒருவர் தனது நாய்களுடன் வாக்கிங் சென்றார். அப்போது கடற்கரை மணலில் 3 அடி நீளச் சுறா ஒன்று தத்தளிப்பதை கண்டார்.
பின்னர் அதனை மீண்டும் கடலுக்கே கொண்டு சென்று விட்டார். இதனையடுத்து சுறா மீண்டும் கடலுக்குள் நீந்திச் சென்றது.
இது குறித்த காட்சிகள் வைரலான நிலையில், சுறாவை காப்பாற்றிய பெண்ணின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
















