சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மெரினா கலைவிழாவை 500க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘மெரினாவில் கலைவிழா’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, மெரினா கடற்கரையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை 500க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். நாட்டுப்புற கலையான வில்லுப்பாட்டை கேட்டு மக்கள் ரசித்தனர். ஆதிமேளம் முழங்க இளைஞர்கள் குழுவால் மல்லர் கம்பம் அரங்கேற்றப்பட்டது.
அப்போது, கம்பத்தில் ஏறி நின்று இளைஞர்கள் செய்த வித்தைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
இதனை தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சி மேடையில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் மக்களை வெகுவாக ஈர்த்தது.
















