பீகாரிலிருந்து இத்தாலி வரை ராகுல்காந்தி எத்தனை யாத்திரைகள் மேற்கொண்டாலும், அவரால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிறுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அர்வாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியின் யாத்திரை ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி பாட்னாவிலிருந்து இத்தாலி வரை எத்தனை யாத்திரைகள் வேண்டுமானாலும் செல்லலாம் எனக்கூறிய அமித்ஷா, ஆனால் அவரால் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
















