திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்பாவம் பொல்லாதது படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட நடிகர் ரியோ ராஜ், விக்னேஷ் உள்ளிட்டோர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கோயிலில் இருந்த பக்தர்கள் ரியோவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
















