மியான்மரில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேசியா நோக்கிச் சென்றது.
பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த மலேசிய கடற்படை உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
மியான்மர் குடியேறிகள் 7 பேர் சடலமாகவும், 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 100 பேர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















