வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 630 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரியார் கால்வாய் பாசனத்திற்கு ஆயிரத்து 130 கன அடி நீரும், மதுரை மாவட்ட முதல் பூர்வீக பாசனத்திற்கு 500 கன நீரும் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















