கடந்த 54 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறை தனது கம்பீரத்தை இழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், டிஜிபி இருந்த போதே காவல்துறை சிறப்பாகச் செயல்படாத நிலையில், தற்போது காவல்துறையின் செயல்பாடு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியான காவல் உயரதிகாரிகள் பலர் இருக்கும்போது, டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்ற தற்காலிக டிஜிபியை முதலமைச்சர் நியமித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
உச்சநீதிமன்றம் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, தேர்வாணைய விதிகளின்படி மூத்த காவல்துறை அதிகாரியை உடனடியாக டிஜிபியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
















