திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மூதாட்டியின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் ஜீவா காலனி பகுதியை சேர்ந்தவர் ராமத்தாள். இவருக்கு 100 வயது நிறைவடைந்த நிலையில், 101-வது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டது.
காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூதாட்டியின் மகன், மகள், பேரன், கொள்ளு பேரன் என ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுசேர்ந்து நடனமாடியும், கேக் வெட்டியும் மூதாட்டியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
















