பெங்களூருவில் உள்ள சிறையில் மதுபோதையில் கைதிகள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் கிடைப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா உள்ளிட்ட சில கைதிகள், சிறைக்குள் மொபைல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர், மது அருந்திவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் உள்ள கைதி ஒருவர் கன்னடத்தில் பேசுவதால், இந்தச் சிறை பரப்பன அக்ரஹாராவா அல்லது மாநிலத்தில் உள்ள வேறு சிறையா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















