நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனப் புகார் தெரிவித்த நபரின் பேச்சிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் செவிசாய்க்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் பார்க்கக் கூட மருத்துவர் இல்லை எனவும், சாதாரண டெஸ்ட் எடுப்பதற்கே 60 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் மணவாளன் என்பவர் புகார் தெரிவித்தார்.
அவரது புகாரை கண்டுகொள்ளாத அமைச்சர் அன்பில் மகேஷ், கூட்டத்தில் இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வேறு கோரிக்கைகள்குறித்து பதிலளிக்க தொடங்கினார். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















