மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
மாலியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 இந்தியர்களும் தமிழர்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட ஐவரின் குடும்பங்களும் வறுமையில் வாடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அன்புமணி, தமிழகத்தில் கண்ணியமான வேலைவாய்ப்புகளைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
















