மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாலையில் செல்லும் வாகனங்களைச் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபடும் இளைஞரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தரங்கம்பாடி அடுத்த துடரிபேட்டை கிராமத்தில் சாலையின் குறுக்கேநின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அவ்வழியாகச் சென்ற வாகனங்களைக் கம்பால் தாக்கிச் சேதப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளை ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
















