பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் உள்ளது.
இந்தப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதை, ஆப்கானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைவதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் உடன், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
















