கொசுக்களை குறிவைத்து கொல்லும் உள்ளங்கை அளவிலான ட்ரோன்களை அமெரிக்க பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொசுக்களால் பல்வேறு நோய் தொற்றுகளை பரவி வருகின்றன. டெங்கு, மலேசியா போன்ற நோய் தொற்றுகளால் இறப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. கொசுக்களை ஒழிக்கக் கொசுவர்த்தி, கொசு பேட் உள்ளிட்டவற்றை கொண்டு பொதுமக்கள் தங்களை தற்காத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் கொசுக்கள் மற்றும் பறக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறியாளர்கள் குழு ஒன்று புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.
டோர்னியோர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உள்ளங்கை அளவிலான மினி ட்ரோன், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை தேடி தேடி கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொசுக்கள் பறந்து செல்லவதை கண்பிடித்தவுடன் அதிவேகத்தில் சுழலும் கத்திகள் மூலம் அவற்றை வெட்டி வீழ்த்தும் வகையில் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் செயலி வாயிலாக இயக்கப்படும் இந்த ட்ரோன் ஆயிரம் டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டள்ளது.
















