உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கோரக்பூரில் நடந்த ஏக்த யாத்திரை மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய யோகி ஆதித்யநாத், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
நமது ராணுவம், எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கும்போதும், தீவிரவாதத்தை முறியடிக்கும்போதும், நமது வீரர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
















