அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 44 லட்சம் ரூபாய் வழங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
தனது பிறந்தநாளன்று திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் 44 லட்சம் ரூபாயை நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், திருமலையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகையில் கே.என்.நேருவின் பெயர் மற்றும் அவர் வழங்கிய நன்கொடை குறித்த விவரங்கள் ஒளிபரப்பப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















