டெலலி கார் வெடிப்பு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
இந்த கார் ஹரியானவைச் சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கார் பல பேருக்கு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்ப விசாரணையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய ‘HR 26 7674’ i20 காரை வைத்திருந்ததாகக் கூறப்படும் குர்கானைச் சேர்ந்த சல்மான் மார்ச் மாதம் தேவேந்திரா என்ற ஒருவருக்கு காரை விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டன, அவற்றில் ஒன்று புல்வாமாவைச் சேர்ந்தவருடையது அதிகாரிகள் தெரிவித்தனர்.
















