டெல்லியில் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதலாம் வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அம்மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் ரோந்துப் பணியை தீவிரபடுத்தவும் , சந்தேகிக்கும் படி உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தவும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரபிரதேசத்தில் உள்ள மதத் தலங்கள், பதட்டமான மாவட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க அம்மாநில டி.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, தமிழகத்தில் சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்கள், சுற்றுலா தளங்களில் கூடுதல் ரோந்து பணிகளை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
















