அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
திருச்சியில் இருந்து அரியலூருக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமம் அருகே வந்தபோது, ஓட்டுநர் லாரியை வளைவில் திருப்பி உள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின. உடனடியாக ஓட்டுநர் கனகராஜ், லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், லாரியில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க ஓட்டுநர்களுக்குப் போலீசார் அறிவுறுத்தினர்.
















