விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேவதானத்தில் உள்ள “அருளிய சாமி” கோயிலில் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் இரவு காவலாளியாகப் பணியாற்றி வந்தனர்.
இருவரும் காலை வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது கோயில் அருகே இருவரும் ரத்த காயங்களுடன் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கோயிலில் உண்டியல், அலமாரிகள் உடைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















