கோவை அன்னூரில் சாலை அமைக்கத் தோண்டப்பட்ட குழியில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து சாலையூர் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அன்னூர் சாலையில் விரிவாக்கத்துக்காகத் தோண்டப்பட்ட குழியில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே சாலையில் பள்ளம் இருப்பதை முறையாக அடையாளப்படுத்தாமல் பணிகள் மேற்கொண்டதால் விபத்து ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி, கோபால் என்ற மாற்றுத்திறனாளி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
















