டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாகச் சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2வது நாளாகப் பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
















