மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஊழியர்களைப் பத்திரமாக மீட்க கோரி உறவினர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, சுரேஷ் ஆகியோர், மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் அங்கு உள்ள பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவரது உறவினர்கள், இருவரையும் மீட்க வலியுறுத்தித் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வெளியுறவு அமைச்சகம் மூலம் இருவரையும் உடனடியாக மீட்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
















