தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த கட்சிகள் இன்று முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பாக அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த கட்சிகள் சின்னங்கள் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிப்பது வழக்கம்.
அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி அங்கீரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள் இன்று முதல் பொது சின்னங்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகள், சட்டப்பேரவை மற்றும் பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
















