சீனாவின் குவாங்சோவில் 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்ற 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இதில் நாட்டின் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பின்னர் வானில் வர்ணஜாலங்கள் நிகழ்த்திய கண்கவர் ட்ரோன் ஷோ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
















