டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட உமர் நபி, கார் வெடிப்பதற்கு முன்பு 3 மணி நேரமாகக் காரில் காத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் நபி, செங்கோட்டைக்கு அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 3 மணி நேரம் காத்திருத்ததாகவும், கார் நிறுத்தப்பட்டதில் இருந்து அவர் ஒரு நொடி கூட கீழே இறங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HR 26 CE7674 என்ற எண் கொண்ட ஹூண்டாய் ஐ20 கார், பிற்பகல் 3.19 மணிக்கு வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்து, மாலை 6.30 மணியளவில் புறப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதர்பூர் எல்லைக்குள் கார் நுழைந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும், அப்போது, அவர் நீலம் மற்றும் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















