டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு காரணமானவர்களை எந்தச் சூழ்நிலையிலும் தப்பிக்க விடமாட்டோம் எனக் கூறிய அவர், சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டுமெனவும் அமைச்சர் ராஜ்நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
















