சேலம் அருகே சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர், வெளிநாட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.
மல்லு முப்பம்பட்டியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார், வங்கதேசத்தை சேர்ந்த ராசிப் சேக், சோபிபேகம், கசம்கான் உள்ளிட்ட 12 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டு காவலில் வைத்த போலீசார், பின்னர் ஆத்தூர் அருகே உள்ள வெளிநாடு அகதிகள் முகாமில் அடைத்தனர்.
















