மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
















