டெல்லியில் கார் வெடிப்புச் சம்பவம் எதிரொலியாக, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதேபோல் கொல்கத்தா, காசியாபாத், ஜம்மு, ஸ்ரீநகர், லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகளின் உடைமைகள், வளாகங்கள் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
















