தேர்தல் கூட்டணிகுறித்து ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொது மக்களுக்குத் தூய்மையான நீர், காற்று, மண்வளம் கிடைக்க செய்வதே தனது கட்சியின் கொள்கை எனத் தெரிவித்தார்.
வேளாண் விளைபொருட்களுக்குரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் கூட்டணிகுறித்து ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
















