பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாகப் பரவிய வதந்திகளுக்கு அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
பழம்பெரும் பாலிவுட் நடிகரான தர்மேந்திரா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவதாகவும், சிலர் அவர் காலமானதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின.
இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினரும், அவர் மகன் சன்னி தியோல் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
















