டார்ஜிலிங்கில் இந்திய மகளிரணி வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் கட்டப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது.
அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு மாநில நிர்வாகம் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்த 22 வயதான விக்கெட் கீப்பர், பேட்டர் ரிச்சா கோஷை கௌரவப்படுத்தும் விதமாக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து ரிச்சா கோஷின் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் கட்டப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்துள்ளார்.
















