விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மின்சாரம் தாக்கியதில் 8ம் வகுப்புப் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த லோக் பிரதீப் என்ற 8ம் வகுப்பு மாணவர், அங்கு உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், பயின்று வந்தார்.
இந்தநிலையில் அவர் பள்ளி கழிவறை கட்டடத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது மேலே சென்ற மின் ஒயர், மாணவர் மீது உரசியுள்ளது.
இதில் மின்சாரம் பாய்ந்து, மாணவர் லோக் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















