டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து, தனது எல்லையில் படைகளைப் பாகிஸ்தான் உஷார்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றாவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனால் இந்தியா தாக்குதல் நடத்திவிடுமோ எனப் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானின் முப்படைகளும் அதிகபட்ச எச்சரிக்கையுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















