நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரத்தில் விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநரின் ஆடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய நிலக்கடலையை விவசாயிகளுக்கு வழங்காமல் வெளிநபர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
உமா மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி புதுச்சத்திரத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், வேளாண்மை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி, இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் உடன் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















