கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களிடம், நீதிபதி அப்துல் ரகுமான் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி முன்பு 3 பேரையும் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த கோவை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுபற்றிப் பேசிய அதிகாரிகள், நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் அடையாள அணிவகுப்பு எங்கு வைத்து நடத்துவது என முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.
















