பீகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 60 புள்ளி 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பீகார் மாநில வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 60 புள்ளி 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















