பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதன்படி, NDTV வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றிபெறும் என்றும், மற்றவை 3 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
People pulse வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 159 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 75 முதல் 101 தொகுதிகளை வெல்லும் எனவும், மற்றவை 2 முதல் 8 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் Matrize மற்றும் IANS நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணி 147 முதல் 167 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாகவும், இண்டி கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவை 5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Chanakya வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 138 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 100 முதல் 108 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மற்றவை 3 முதல் 5 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JVC POLL வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 135 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 88 முதல் 103 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றிபெறும் என்றும், மற்றவை 3 முதல் 6 தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 147 முதல் 167 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதேபோல் Peoples Insight -ன் கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 148 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 87 முதல் 102 தொகுதிகளில் வெல்லும் எனவும், மற்றவை 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
Dainik Baskar வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 73 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மற்றவை 5 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
DV Research வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 137 முதல் 152 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணி 83 முதல் 98 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் News 24-ன் கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 147 முதல் 167 தொகுதிகளில் வெல்லும், இண்டி கூட்டணி 70 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவை 2 முதல் 8 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
P- Marq வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 142 முதல் 162 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இண்டி கூட்டணி 80 முதல் 98 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவை 3 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளதால் என்டிஏ கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















