டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், NIA தலைவர் சதானந்த் வசந்த், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் சதீஷ் கோல்சா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டானர்.
மேலும் இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் டிஜிபியும் கலந்து கொண்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் தங்களது விசாரணை அமைப்புகளின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















